ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய மிஷ்பா ஹுல் ஹக்

PARIS TAMIL  PARIS TAMIL
ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய மிஷ்பா ஹுல் ஹக்

 ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான மிஷ்பா ஹுல் ஹக் 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார்.

 
ஹொங்கொங் டி20 பிலிட்ஸ் தொடரில் ஹொங் கொங் ஜகூவார்ஸ் மற்றும் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே மிஷ்பா ஹுல் ஹக் ஆறு சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
 
இவர் 18 ஆவது பந்து ஓவரின் 5 மற்றும் 6 பந்துகளை சிக்ஸருக்கு விளாசியதுடன், 19 ஆவது பந்து ஓவரின் 2,3,4 மற்றும் 5 ஆவது பந்துகளில் ஆறு ஓட்டத்தை விளாசி அசத்தியுள்ளார்.
 
மிஷ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
 
இதேசேவளை இந்த போட்டியில் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை