எம்ஜிஆர், சிவாஜி பட இயக்குனர் பேரன் அறிமுகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்ஜிஆர், சிவாஜி பட இயக்குனர் பேரன் அறிமுகம்

தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அதிகம். இயக்குனர்களின் வாரிசு என்ற வகையில் பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பிரகாசித்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் மற்றொரு வாரிசாக அறிமுகமாகிறார் டி. சத்யா. இவர் எம்ஜிஆர் நடித்த படகோட்டி, சிவாஜி நடித்த உத்தமபுரத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டி. பிரகாஷ்ராவ்.

இவரது பேரன். ஏற்கனவே தெலுங்கில் பீமிலி கபடி ஜட்டு, எஸ். எம். எஸ், ஷங்கரா ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்.

யார் இவன் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன், திரில்லர் படமாக இது உருவாகிறது.

சச்சின், இஷா குப்தா ஆகியோருடன் பிரபு, கிஷோர் குமார், சதிஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரைனா ஜோஸி தயாரிக்கிறார்.

எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

பினேந்திர மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

.

மூலக்கதை