மீண்டும் ஒரு குறும்படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்..!

தினமலர்  தினமலர்
மீண்டும் ஒரு குறும்படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்..!

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு 'டேவிட்' என்கிற படம் வெளியானது ஞாபகம் இருக்கிறதா..? விக்ரம் - ஜீவா இணைந்து நடித்திருந்த இந்தப்படத்தை மணிரத்னத்தின் சீடரான பிஜாய் நம்பியார் இயக்கி இருந்தார். இந்தப்படம் பிளாப் என்கிற தகவலுக்குள் எல்லாம் நாம் செல்ல தேவையில்லை.. தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மானை வைத்து 'சோலோ' என்கிற படத்தை இயக்கிவருகிறார் பிஜாய் நம்பியார். இதன் ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது..

இந்தநிலையில் இந்தப்படம் முழுநீள திரைப்படம் அல்ல எனவும் சற்றே நெடிய குறும்படமாகவே இது உருவாக்கி வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நான்கைந்து குறும்படங்களை இணைத்து உருவாகும் ஆந்தாலாஜி வகை படத்தில், ஒரு குறும்படமாக இது இணைக்கப்பட இருக்கிறதாம். ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தது குறிப்பிடத்ததக்கது.

மூலக்கதை