என் சகோதரருக்கு ஹீரோவாகும் தகுதி உள்ளது - சாகித்

தினமலர்  தினமலர்
என் சகோதரருக்கு ஹீரோவாகும் தகுதி உள்ளது  சாகித்

பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் சாகித் கபூர். தற்போது இவர் ‛ரங்கூன்' படத்தில் நடித்திருக்கிறார். நாளை மறுநாள்(பிப்.,24) படம் வெளியாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பம்பரமாய் சூழன்று கொண்டிருக்கிறார். இதனிடையே, சாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டாரும் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அவரது முதல்படமாக ‛பியாண்ட் தி கிளவுட்ஸ்' என்ற படம் வெளிவர இருக்கிறது.

தனது சகோதரர் சினிமாவில் நடிக்க வந்திருப்பது பற்றி சாகித் கூறியிருப்பதாவது... ‛‛என் சகோதரர் ஒருநாள் சினிமாவில் ஹீரோவாக வருவார் என்று தெரியும். அதற்கான அனைத்தும் தகுதியும் அவரிடம் உள்ளது. சின்ன வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டார். அதனால் நான் கொஞ்சம் பயந்தேன், ஆனால் அவரது முதல்படத்தை இயக்குநர் மஜித் மஜிதி இயக்குவது அவருக்கு நல்ல தொடக்கமாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.

மூலக்கதை