மொபைல் போன் தொழிற்­சாலை; ஆப்பிள் நிறு­வ­னத்­திற்கு அனு­மதி?

தினமலர்  தினமலர்
மொபைல் போன் தொழிற்­சாலை; ஆப்பிள் நிறு­வ­னத்­திற்கு அனு­மதி?

புது­டில்லி : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறு­வனம், இந்­தி­யாவில் மொபைல் போன் உற்­பத்தி ஆலை அமைக்க, மத்­திய அரசு, சாத­க­மான முடிவை அறி­விக்க உள்­ள­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது.
இது குறித்து, அரசு வட்­டா­ரங்கள் கூறி­ய­தா­வது: ஆப்பிள் நிறு­வனம், இந்­தி­யாவில், மொபைல் போன் உற்­பத்தி ஆலை அமைக்கும் கோரிக்கை குறித்து, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­சகம், சாத­க­மான முடிவு எடுக்கும் என, தெரி­கி­றது. என்­றாலும், மொபைல் உற்­பத்தி ஆலை அமைக்க, பிர­தமர் அலு­வ­ல­கத்தின் இறுதி ஒப்­புதல் வேண்டும். கடந்த மாதம், ஆப்பிள் நிறு­வனம், இந்­தி­யாவில் மொபைல் போன் தொழிற்­சாலை அமைப்­ப­தற்­கான செயல் திட்­டத்தை தயா­ராக வைத்­துள்­ள­தாக, மத்­திய அர­சிடம் தெரி­வித்­தி­ருந்­தது. மேலும், பல்­வேறு சலு­கை­க­ளையும், மத்­திய அர­சிடம் கேட்­டி­ருந்­தது.
குறிப்­பாக, அன்­னிய நிறு­வ­னங்கள், 30 சத­வீதம், உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­களை பயன்­ப­டுத்த வேண்டும் என்ற நிபந்­த­னையை தளர்த்­து­மாறு, ஆப்பிள் நிறு­வனம் கோரி வரு­கி­றது.இவ்­வாறு அந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. ஆப்பிள் நிறு­வனம், இந்­தி­யாவில், ரெடிங்டன், இன்­கிராம் மைக்ரோ நிறு­வ­னங்கள் மூலம், அதன் மொபைல் போன்­களை விற்­பனை செய்து வரு­கி­றது.

மூலக்கதை