‘பட்டு உற்­பத்­தியில் இந்­தியா தன்­னி­றைவு அடையும்’

தினமலர்  தினமலர்
‘பட்டு உற்­பத்­தியில் இந்­தியா தன்­னி­றைவு அடையும்’

ஐத­ராபாத் : ‘‘இந்­தியா, அடுத்த, 3 – 4 ஆண்­டு­களில், பட்டு உற்­பத்­தியில் தன்­னி­றைவு அடையும்,’’ என, மத்­திய பட்டு வாரி­யத்தின் தலைவர், கே.எம்.ஹனு­மந்­த­ரா­யப்பா நம்­பிக்கை தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: சர்­வ­தேச பட்டு உற்­பத்­தியில், சீனா, 80 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது. அடுத்த இடத்தில், 13 சத­வீத பங்­க­ளிப்­புடன், இந்­தியா உள்­ளது. இந்­தியா, பட்டு உற்­பத்­தியை அதி­க­ரிக்க, தீவிர முயற்சி மேற்­கொண்டு வரு­கி­றது. இதன் விளைவால், பட்டு உற்­பத்தி, ஆண்­டுக்கு, 19 சத­வீதம் வளர்ச்­சியை கண்­டுள்­ளது. தற்­போது, இந்­தியா, ஆண்­டுக்கு, 28 ஆயிரம் டன் முதல், 30 ஆயிரம் டன் வரை, பட்டு உற்­பத்­தியை மேற்­கொள்­கி­றது. அடுத்த, மூன்று அல்­லது நான்கு ஆண்­டு­களில், பட்டு உற்­பத்­தியை, 34 ஆயிரம் டன்­னாக உயர்த்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இந்த இலக்கை எட்­டும்­பட்­சத்தில், இந்­தியா, பட்டு உற்­பத்­தியில் தன்­னி­றைவு அடையும். இறக்­கு­ம­திக்­காக, சீனாவை சார்ந்­தி­ருக்கும் நிலை, முடி­வுக்கு வரும். ஏற்­க­னவே, பட்டு இறக்­கு­மதி, 6,500 டன்னில் இருந்து, 3,500 டன்­னாக குறைந்­துள்­ளது.
சீனா, மல்­பரி பட்டு வகையை மட்­டுமே உற்­பத்தி செய்­கி­றது. ஆனால், இந்­தி­யாவில், ‘டசார், முகா’ உள்­ளிட்ட, பட்டு வகைகள் உற்­பத்தி ஆகின்­றன. பட்டு உற்­பத்­தியை அதி­க­ரிக்க, மாநில அர­சுகள் முயற்சி மேற்­கொள்ள வேண்டும். நிதிச் சலு­கைகள் வழங்கி, பட்டு விவ­சா­யி­களை ஊக்­கு­விக்க வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் மூலம், இந்­தியா, பட்டு உற்­பத்­தியில் வெகு விரை­வாக தன்­னி­றைவு அடையும். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை