சர்வதேச கிரிக்கெட் அப்ரிடி ஓய்வு

தினகரன்  தினகரன்

கராச்சி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி (36 வயது) அறிவித்துள்ளார். 1996ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அப்ரிடி தனது அதிரடி ஆட்டத்தால் தனி முத்திரை பதித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அவர் 27 டெஸ்டில் 1716 ரன் (அதிகம் 156, சராசரி 36.51, சதம் 5, அரை சதம் 8), 48 விக்கெட்; 398 ஒருநாள் போட்டிகளில் 8064 ரன் (அதிகம் 124, சராசரி 23.57, சதம் 6, அரை சதம் 39) மற்றும் 395 விக்கெட்; 98 டி20ல் 1405 ரன், 97 விக்கெட் எடுத்துள்ளார்.

மூலக்கதை