2வது போட்டியிலும் ஆப்கன் வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
2வது போட்டியிலும் ஆப்கன் வெற்றி

ஹராரே: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆப்கன் வெற்றிபெற்ற நிலையில், 2வது ஒன்டே நேற்று ஹராரேயில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 238 ரன் எடுத்தது. அதிகபட்சமாக முகமது சேஷாத் 64 ரன் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய ஜிம்பாப்வே 42. 1 ஓவரில் 184ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 54 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் வெற்றி பெற்றது.



.

மூலக்கதை