பஞ்சாப் மாடல் கோலிவுட்டில் என்ட்ரி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சாப் மாடல் கோலிவுட்டில் என்ட்ரி

பாலிவுட் நடிகைகளின் என்ட்ரி கோலிவுட்டில் அதிகளவில் நடந்தாலும் பஞ்சாப், வங்காள மொழிப்பட நடிகைகள் அத்திப்பூத்தார்போன்றே இங்கு வருகின்றனர். பரத் நடிக்கும், கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தில் அறிமுகமாகிறார் ருஹானி ஷர்மா.

இவர் பஞ்சாப் மியூசிக் ஆல்பங்களில் கொடிகட்டி பறப்பதோடு, மாடல் அழகியுமாகவும் இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடிக்கிறார் அங்கனா ராய்.

இப்படம் குறித்து இயக்குனர் ரவி பார்க்கவன் கூறும்போது, ‘காதல் என்று தமிழில் சொல்லும்போது இருக்கும் மரியாதை அதையே ஆங்கிலத்தில் லவ் என்று சொல்லும்போது மரியாதைக்குரியதாக இல்லாமல் கொச்சைப்படுத்தப்படுகிறது. இது எப்படி நிகழ்கிறது என்பது இக்கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

காதல் கதையாக இருந்தாலும் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது ஏன் என்கிறார்கள். கமர்ஷியல் ரீதியாக சொல்லப் பட்டிருக்கும் தன்மைக்காக அந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.

முஜிர் மாலிக் ஒளிப்பதிவு. சுதிர் புதோடா தயாரிப்பு.

அன்பு ராஜேஷ் இசை. இதில் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அடுத்த மாதம் ரிலீஸ்’ என்றார்.

.

மூலக்கதை