பீச்சாங்கை இடது கை பழக்கத்தை மையமாக கொண்டு உருவாகும் படம்

PARIS TAMIL  PARIS TAMIL
பீச்சாங்கை இடது கை பழக்கத்தை மையமாக கொண்டு உருவாகும் படம்

 பொதுவாக நூறில் ஒருவருக்கு இடது கை பழக்கம் இருக்கும் என்பார்கள். அதாவது வலது கையை விட இடது கை பலமாகவும், பழக்கத்துக்கு எளிதாகவும் இருக்கும். இதையே கதையின் கருவாக்கி ஒரு படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் பீச்சாங்கை. புதியவர்கள் இணைந்து இதனை உருவாக்குகிறார்கள்.

 
கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அஷோக் இயக்குகிறார். புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலிராவுடன் எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, கிரிஷ் நடிக்கிறார்கள், கவுதம் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். இவர்கள் அனைவருமே புதியவர்கள்.
 
"எதையாவது வித்தியாசமான சொன்னால்தான் இப்போதெல்லாம் மக்களுக்கு பிடிக்கிறது. அந்த வித்தியாசமும் மக்களுக்கு அறிமுமானதாக, பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதனால் தான் இடது கை பிரச்னையை கையில் எடுத்து திரைக்கதை அமைத்தோம்.
 
படத்தின் கதாநாயகன் இடது கை பழக்கம் உள்ள ஒரு பிக் பாக்கெட் திருடன். தான் செய்யும் திருட்டு தொழிலை மிகவும் கவுரமாக கருதும் அவனுக்கு, ஒரு கட்டத்தில் ஏலியன் ஹாண்ட் சின்ட்றோம் என்கின்ற ஒரு குறைபாடு ஏற்படுகின்றது. அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாக கொண்டு தான் படத்தின் கதைக்களம் நகரும். கதாநாயகன் - கதாநாயகி உட்பட எங்களின் படத்தில் பணிபுரிந்திருக்கும் பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்கள் தான். நிச்சயமாக இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது" என்கிறார் இயக்குனர் அஷோக்.

மூலக்கதை