François Fillonக்கு எதிராக மாறிய 70 வீத பிரெஞ்சு மக்கள்! - ஜனாதிபதி கனவு தகர்ந்தது!!

PARIS TAMIL  PARIS TAMIL
François Fillonக்கு எதிராக மாறிய 70 வீத பிரெஞ்சு மக்கள்!  ஜனாதிபதி கனவு தகர்ந்தது!!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும்வரை ஓயப்போவதில்லை என François Fillon தெரிவித்ததன் பின்னர், எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், பிரெஞ்சு மக்களில் 70 வீதமான மக்கள் François Fillonக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் François Fillon பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில், அவரின் செல்வாக்கு கணிசமாக குறைந்து வருவது வாசகர்கள் அறிந்ததே. தற்போது, ஜனாதிபதி வேட்பாளராக தொடர்ந்தும் François Fillon போட்டியிடுவதை, 70 வீதமான பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பதாக Ifop நிறுவனம் எடுத்திருந்த புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த வாரத்தில் எடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் 65 வீதமான மக்கள் François Fillonக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக François Fillonக்கு எதிராக பிரெஞ்சு மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருவது அவரின் ஜனாதிபதி கனவை தகர்த்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை