பங்கு சந்­தைக்கு வரு­கி­றது பாரத் ரோடு நெட்வொர்க்ஸ்

தினமலர்  தினமலர்
பங்கு சந்­தைக்கு வரு­கி­றது பாரத் ரோடு நெட்வொர்க்ஸ்

கோல்­கட்டா : பங்­கு­களை வெளி­யிட்டு, 1,200 கோடி ரூபாய் அள­வுக்கு நிதி திரட்டும் முயற்­சியில், பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் நிறு­வனம் இறங்கி இருக்­கி­றது. இதை­ய­டுத்து, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’­யிடம், பங்கு வெளி­யீட்­டுக்­காக விண்­ணப்­பித்து உள்­ளது.பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் சாலைகள் போடு­வது, பரா­ம­ரிப்­பது உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை செய்து வரு­கி­றது. குறிப்­பாக, நெடுஞ்­சாலைத் துறை திட்­டங்­க­ளுக்­காக, பல்­வேறு பணி­களை செய்து வரு­கி­றது. 10 ரூபாய் முக­ம­திப்பு கொண்ட, 29.30 லட்சம் பங்­கு­களை, இந்­நி­று­வனம் வெளி­யிட இருக்­கி­றது. முக­ம­திப்பு, 10 ரூபா­யாக இருப்­பினும், இறுதி விலை பின் முடிவு செய்­யப்­படும். பங்கு வெளி­யீட்டின் மூல­மாக திரட்­டப்­படும் நிதியை, தன் துணை நிறு­வ­னங்­களின் மேம்­பாட்­டுக்­காக, கட­னாக வழங்க இருக்­கி­றது.பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஐ.என்.ஜி.ஏ., கேபிட்டல், இன்­வெஸ்டெக் கேபிட்டல் சர்­வீசஸ், ஸ்ரீ கேபிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறு­வ­னங்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன.

மூலக்கதை