மின்­னணு சாத­னங்கள் இறக்­கு­மதி 26 சத­வீதம் அதி­க­ரிப்பு

தினமலர்  தினமலர்
மின்­னணு சாத­னங்கள் இறக்­கு­மதி 26 சத­வீதம் அதி­க­ரிப்பு

புது­டில்லி : இந்­தாண்டு ஜன­வ­ரியில், மின்­னணு சாத­னங்கள் இறக்­கு­மதி, 26 சத­வீதம் அதி­க­ரித்து, 26,758 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது; ஏற்­று­மதி, 10 சத­வீதம் குறைந்து, 3,163 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், முறையே, 21,220 கோடி ரூபாய் மற்றும் 3,526 கோடி ரூபா­யாக இருந்­தது. இது குறித்து, இந்­திய மின்­னணு தொழில்கள் கூட்­ட­மைப்பின் செக­ரட்­டரி ஜெனரல் ராஜூ கோயல் கூறி­ய­தா­வது:மின்­னணு துறையில், மொபைல் போன், தொலை தொடர்பு சாத­னங்கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­கி­றது. ஆனால், அவற்றில் அடங்­கி­யுள்ள பெரும்­பான்­மை­யான உப­க­ர­ணங்கள், இறக்­கு­ம­தியை சார்ந்து இருக்­கின்­றன. இதன் கார­ண­மா­கவே, மின்­னணு சாத­னங்கள் இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்­ளது.மத்­திய அரசு, மின்­னணு பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விப்­பதால், வணி­கர்கள் பயன்­ப­டுத்தும், ‘பாயின்ட் ஆப் சேல்’ சாத­னங்கள், விரல் ரேகை பதிவு கரு­விகள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. அதனால், இவ்­வகை சாத­னங்­களின் இறக்­கு­மதி உயர்ந்­துள்­ளது. இறக்­கு­ம­தியை குறைக்க, உள்­நாட்டு உற்­பத்­திக்கு மேலும் ஊக்­க­ம­ளிக்க வேண்டும். இவ்­வாறு அவர் கூறினார்.கடந்த 2015 – 16ம் நிதி­யாண்டில், 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள மொபைல் போன்கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டன. இது, நடப்பு நிதி­யாண்டில், 90 ஆயிரம் கோடி ரூபாய் உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மத்­திய மின்­னணு மற்றும் தகவல் தொழில்­நுட்ப அமைச்­சகம், 2019ல், உள்­நாட்டில், 50 கோடி மொபைல் போன்­களை தயா­ரிக்க, இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. மேலும், 2019 – 20ம் நிதி­யாண்டில், 12 கோடி மொபைல் போன்­களை ஏற்­று­மதி செய்­யவும், உற்­பத்தி மதிப்பை, 1.5 – 3 லட்சம் கோடி ரூபா­யாக உயர்த்­தவும் திட்­ட­மிட்டு உள்­ளது.

மூலக்கதை