ஹாலிவுட் தரத்தில் படமாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாலிவுட் தரத்தில் படமாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை

மறைந்த இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை திரைப்படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை அனில் சன்காரா, அபிஷேக் அகர்வால் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

ராமபிரஹமம் சன்காரா இயக்குகிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ 104 செயற்கை கோள்களை சமீபத்தில் விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

அன்றைய தினத்தில் டாக்டர் அப்துல் கலாம் படத்தின் பர்ஸ்ட் லுக் இணைய தளங்களில் வெளியிடப்பட்டது.

இந்திய தேசிய கொடியுடன் ராக்கெட் ஒன்று விண்வெளியை நோக்கி பாய்வது போலவும் அதனை அப்துல்கலாம் ரசிப்பதுபோலவும் இந்த டிசைன் அமைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் டைட்டிலின் துணை வாக்கியமாக, ‘எல்லா வயதிலும் ஹீரோக்கள் இருக்கிறார்கள், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு கதை உள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாசகம் அப்துல்கலாமின் வாழ்க்கையை ஒரு வரியில் சொல்வதுபோல் அமைந்திருந்தது.

ராஜ் செங்கப்பா எழுதிய அப்துல்கலாம் வாழ்க்கை கதை புத்தகத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகிறது.

மே அல்லது ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க ஏற்பாடு நடக்கிறது.

.

மூலக்கதை