செல்ல நாய்களே என்னுடைய உலகம் - டோனி மேலும் ஒரு பிரத்யேக வீடியோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
செல்ல நாய்களே என்னுடைய உலகம்  டோனி மேலும் ஒரு பிரத்யேக வீடியோ

ராஞ்சி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி தன்னுடைய செல்ல நாய்களுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

டென்னிஸ் பந்தை தான் வளர்க்கும் 3 நாய்களிடம் போட்டு அவை கேட்ச் பிடிப்பதை பார்த்து ரசிப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. 2013ம் ஆண்டில் ஏற்கனவே டோனி குடியிருந்த பகுதியில் நாய்கள் தொல்லை பற்றி குடியிருப்புதாரர்கள் தரப்பில் புகார் அளித்ததால் பிரச்னை எழுந்தது.

அவருடைய மனைவி சாக்‌ஷி சமாதானப்படுத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். செல்ல நாய்கள் தான் என்னுடைய உலகம் என மகேந்திரசிங் டோனி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், வெற்றியோ, தோல்வியோ மனதை அமைதிப்படுத்த ராஞ்சிக்கு வந்து வீட்டில் செல்ல நாய்களுடன் பொழுதை கழித்தால் மனக்கவலை தீர்ந்து விடும், என கூறியிருப்பது குறிப்படத்தக்கது.

.

மூலக்கதை