எம்.சி.எக்ஸ்., – எஸ்.டி.ஐ.எக்ஸ்., ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது

தினமலர்  தினமலர்
எம்.சி.எக்ஸ்., – எஸ்.டி.ஐ.எக்ஸ்., ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது

மும்பை : எம்.சி.எக்ஸ்., நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:எஸ்.டி.ஐ.எக்ஸ்., எனப்­படும், சிங்­கப்பூர் வைர முத­லீட்டு சந்தை, வைரங்­களில் முத­லீடு செய்­வ­தற்கும், வர்த்­தகம் புரி­வ­தற்கும் உதவும், ஒரே சந்­தை­யாக உள்­ளது. இச்­சந்­தை­யுடன், ஆய்வு, தொழில்­நுட்பம், வர்த்­தகம் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­களில், இணைந்து செயல்­பட, எம்.சி.எக்ஸ்., முடிவு செய்­துள்­ளது. மும்­பையில் நடை­பெற்ற விழாவில், இதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது. எம்.சி.எக்ஸ்., நிர்­வாக இயக்­குனர் மிருகன்க் பரன்­ஜபி மற்றும் எஸ்.டி.ஐ.எக்ஸ்., தலைமை செயல் அதி­காரி லினஸ் கோ, ஆகியோர் ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர்.
வைரக் கற்­களை நறுக்­கு­வது, பட்டை தீட்­டு­வது உள்­ளிட்ட வர்த்­த­கத்தில், உலகின் மிகப் பெரிய மைய­மாக, இந்­தியா விளங்­கு­கி­றது. இந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மூலம், எம்.சி.எக்ஸ்., – எஸ்.டி.ஐ.எக்ஸ்., நிறு­வ­னங்­களின் பரஸ்­பர ஒத்­து­ழைப்பு மேம்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

மூலக்கதை