கார்­களில் நவீன தொழில்­நுட்ப வசதி ;டாடா மோட்டார்ஸ் – மைக்­ரோசாப்ட் ஒப்­பந்தம்

தினமலர்  தினமலர்
கார்­களில் நவீன தொழில்­நுட்ப வசதி ;டாடா மோட்டார்ஸ் – மைக்­ரோசாப்ட் ஒப்­பந்தம்

மும்பை : டாடா மோட்டார்ஸ் நிர்­வாக இயக்­குனர் கன்டர் புட்ஸ்செக் கூறி­ய­தா­வது: கார் வாங்­குவோர் மேம்­பட்ட சேவை­களை எதிர்­பார்க்­கின்­றனர். அதனால், தகவல் தொழில்­நுட்பம் மூலம், அதி­ந­வீன வச­தி­களை, கார்­களில் அறி­மு­கப்­ப­டுத்த, டாடா மோட்டார்ஸ் முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, மைக்­ரோசாப்ட் நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. சாலையில் பாது­காப்­பாக செல்­வ­தற்கும், ஓட்­டு­னர்கள், தொலைவில் உள்ள பொருட்­களை முன்­ன­தா­கவே அறிந்து கொண்டு, எச்­ச­ரிக்­கை­யுடன் வாக­னத்தை செலுத்­தவும், ‘சென்சார்’ சாத­னங்கள் உத­வு­கின்­றன. இவ்­வகை தொழில்­நுட்ப வச­தி­க­ளுடன், டாடா கார்­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.
டாடா காரில் பயணம் செய்வோர், தகவல் தொழில்நுட்ப வச­தி­க­ளுடன், புதிய அனு­ப­வத்தை பெறலாம். ஜெனி­வாவில், மார்ச், 7ல் நடை­பெறும் சர்­வ­தேச மோட்டார் வாகன கண்­காட்­சியில், அதி­ந­வீன தொழில்­நுட்ப வசதி கொண்ட டாடா கார் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை