மகிந்­திரா எலக்ட்ரிக் நிறு­வனம் ‘இ2ஓ பிளஸ்’ கார் அறி­முகம்

தினமலர்  தினமலர்
மகிந்­திரா எலக்ட்ரிக் நிறு­வனம் ‘இ2ஓ பிளஸ்’ கார் அறி­முகம்

சென்னை : மகிந்­திரா எலக்ட்ரிக் நிறு­வனம், சென்­னையில், ‘இ2ஓ பிளஸ்’ என்ற பேட்­ட­ரியில் இயங்கும், எலக்ட்ரிக் காரை அறி­முகம் செய்­துள்­ளது.
இது­ கு­றித்து, அந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி மகேஷ் பாபு கூறி­ய­தா­வது: மகிந்­திரா குழு­மத்தைச் சேர்ந்த எங்கள் நிறு­வனம், எலக்ட்ரிக் வாக­னங்­களின் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. மத்­திய அரசு, சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காத, பேட்­ட­ரியில் இயங்கக் கூடிய, எலக்ட்ரிக் வாக­னங்­களின் பயன்­பாட்டை ஊக்­கு­விக்க, மானியம், வரி குறைப்பு உள்­ளிட்ட சலு­கை­களை வழங்கி வரு­கி­றது.
தற்­போது, மகிந்­திரா எலக்ட்ரிக், ‘இ2ஓ பிளஸ்’ என்ற பெயரில், எலக்ட்ரிக் காரை அறி­முகம் செய்­துள்­ளது. இந்த காரின் பேட்­டரி, அதி­ந­வீன தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது. காரை, ஒரு முறை, ‘சார்ஜ்’ செய்தால், 140 கி.மீ., துாரம் செல்­லலாம். சென்­னையில், இந்த காரின் விலை, 7.70 லட்சம் ரூபாய் என்­ற­ளவில் உள்­ளது. காருக்கு, மூன்று ஆண்­டுகள் அல்­லது 60 ஆயிரம் கி.மீ., துாரத்­துக்கு, ‘வாரன்டி’ வழங்­கப்­படும். வாடிக்­கை­யாளர் விரும்பும் வகையில், நவீன வகையில், இந்த கார் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. ‘மொபைல் ஆப்’ வாயி­லாக, காரை ஒருங்­கி­ணைப்­பது உள்­ளிட்ட பல வச­திகள் உள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை