சைதன்யாவுக்கு முத்தம்; சமந்தா காதல் பரிசு - ஒவ்வொரு நாளும் ‘லவ்’ கொண்டாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சைதன்யாவுக்கு முத்தம்; சமந்தா காதல் பரிசு  ஒவ்வொரு நாளும் ‘லவ்’ கொண்டாட்டம்

காதலர் தினத்தில் நட்சத்திர காதலர்கள் ரகசியமாக சந்தித்து பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். சிலர் வெளிப்படையாக தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்து தற்போது திருமணத்தை நோக்கியிருக்கும் சமந்தா, நாக சைதன்யா ஜோடிக்கு சமீபத்தில் குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னமும் தம்பதியாகாத நிலையில் அவர்களை காதலர் தினத்தன்று ரசிகர்கள் இணைய தளத்தில் தேடிய வண்ணம் இருந்தனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் சமந்தா. சைதன்யாவுக்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

அது இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. காதலர் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் சைதன்யாவை நான் காதலிக்கிறேன் என்று அதில் சமந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

சமந்தாவுக்கு காரில் வேகமாக செல்வதென்றால் பயம்.

ஆனால் சைதன்யா கார் ரேஸ் வீரராகவும் இருக்கிறார். சமீபத்தில் சைதன்யாவுக்கு கார் பரிசளித்தார் சமந்தா.

பிறகு தனது ரேஸ்காரில் சமந்தாவை அமர்த்திக்கொண்டு வேகமாக ஓட்டிச்சென்றார். வேகம் என்றால் சமந்தாவுக்கு பயம், என்றாலும் காதலனுக்காக பயத்தை உதறிவிட்டு ரேஸ்காரில் சென்றார்.

மேலும் தனது நிச்சயதார்த்த தினத்தன்று தங்கள் இருவரின் காதல் கதையை சித்தரிக்கும் வகையில் பல லட்சம் மதிப்பில் ஓவியங்கள் தீட்டப்பட்ட சேலை அணிந்திருந்தார். சைதன்யா, சமந்தாவின் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது.

தொடர்ந்து படங்களில நடிக்க முடிவு செய்திருந்தாலும் கவர்ச்சிக்கு டாட்டா காட்டிவிட்டு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சமந்தா.

.

மூலக்கதை