முச்சதம் விளாசிய கருண் நாயரின் காதலி யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
முச்சதம் விளாசிய கருண் நாயரின் காதலி யார்?

பெங்களூரு: உலகம் முழுவதும் கடந்த 14ம் தேதி காதலர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காதலர் தின வாரமான தற்போது, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கருண் நாயர் தனக்கு காதலி இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த சிறப்பு வாய்ந்த நபரின் பெயரை அறிந்து கொள்ள முற்பட்டால் ஏமாற்றமே மிஞ்சும்! ஏனெனில் தனது காதலி என அவர் குறிப்பிடுவது அவரது சிகப்பு நிற போர்டு முஸ்டாங் காரை தான். எனது காதலி என ‘கேஏ 03 என்ஏ 303’ என்ற எண் கொண்ட ‘போர்டு முஸ்டாங்’ காரின் படத்தை டிவிட்டரில் கருண் நாயர் பதிவிட்டுள்ளார்.

இந்த காரின் ‘நம்பர் பிளேட்டும்’ அனைவரையும் கவரும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘கேஏ’ என்பது கர்நாடகாவை குறிக்கிறது.

அத்துடன் கருண் என்ற பெயரின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களும் கூட ‘கேஏ’ தான். சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது கருண் நாயர் முச்சதம் (303 நாட் அவுட்) விளாசி சாதனை படைத்தார்.



இதன் மூலம் சேவாக்கிற்கு பிறகு முச்சதம் விளாசும் 2வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனிடையே அவரது காரின் ‘நம்பர் பிளேட்டில்’ உள்ள ‘03’ என்ற எண் இந்தியாவிற்காக மூன்றாவது முச்சதம் விளாசிய வீரர் என்பதை குறிப்பிடும் வகையில் உள்ளது.

ஏனெனில் சேவாக் 2 முறை முச்சதம் விளாசியுள்ளார். அத்துடன் தான் விளையாடிய 3வது டெஸ்டில்தான் கருண் நாயர் முச்சதம் விளாசினார்.

இதனால் ‘03’ என்ற எண் இதற்கும் கூட மிகச்சரியாக பொருந்தி போகிறது. ‘என்ஏ’ என்பது அவரது குடும்ப பெயரான நாயர் என்பதன் முதல் 2 எழுத்துக்கள்.

‘303’ என்பது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த ஸ்கோர். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற எண் கொண்ட கார்களை வைத்திருப்பது இது முதல் முறையல்ல.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 7781 என்ற எண் கொண்ட ‘ஹம்மர்’ கார் ஒன்றை வைத்துள்ளார்.

7781 என்பது அவரது பிறந்த தினமான 7-7-1981 என்பதை குறிப்பிடுகிறது.

.

மூலக்கதை