யாழில் தீவிர தேடுதலில் நடவடிக்கையில் இராணுவத்தினர்! 5 பேர் இதுவரையிலும் கைது

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் தீவிர தேடுதலில் நடவடிக்கையில் இராணுவத்தினர்! 5 பேர் இதுவரையிலும் கைது

 யாழில் வாள் வெட்டுக்குழுக்களை தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
யாழ்ப்பாணத்தில் யுத்தத்திற்கு பின்னான காலப்பகுதியில் பல சமுதாய சீரழிவுகள்  அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் அண்மைக்காலங்களாக வாள்வெட்டு கலாசாரம் மேலோங்கியுள்ளது.
 
இதனை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ், விசேட அதிரடிப்படை என்பன களமிறக்கப்பட்டும் பெருமளவில் நன்மைபயக்கவி ல்லை. எனினும் ஒரு சிலர் பொலிஸாரின் செயற்பாடுகளினால் சில குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதில் கடந்தவாரங்களில் வாள்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதேவேளை யாழ் நல்லூர் அரசடியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன்  தொடர்புபட்ட 5 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை வாள்வெட்டில் ஈடுபட்டுவரும் முக்கிய நபர்கள் சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை.இவர்களை தேடி பொலிஸார் இரவு வேளைகளில் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். விசேடமாக இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர்.
 
ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினரும் கடமையிலிருந்து வருகின்றனர். இதேவேளை இராணுவத்தினரும் நேற்றைய தினம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

மூலக்கதை