மொபைல் போன் விற்­பனை மையங்கள் ஜியோமி நிறு­வனம் அமைக்­கி­றது

தினமலர்  தினமலர்
மொபைல் போன் விற்­பனை மையங்கள் ஜியோமி நிறு­வனம் அமைக்­கி­றது

ஆம­தாபாத்: சீனாவைச் சேர்ந்த, ஜியோமி நிறு­வனம், அதன் மொபைல் போன் வணி­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக, இந்­தி­யாவில், பிரத்­யேக விற்­பனை மையங்­களை அமைக்க உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் இந்­திய பிரிவின் உய­ர­தி­காரி மனு ஜெயின் கூறி­ய­தா­வது: கடந்த ஆண்டு, மார்ச் – ஏப்., மாதங்­களில், சிங்கிள் பிராண்டு சில்­லரை விற்­ப­னையின் கீழ், அதி­ந­வீன தொழில்­நுட்­பத்­துடன் கூடிய, விற்­பனை மையங்கள் அமைக்க, மத்­திய அர­சிடம் உரிமம் கோரி விண்­ணப்­பித்­தி­ருந்தோம். இதற்கு, விரைவில் அனு­மதி கிடைக்கும் என, நம்­பு­கிறோம்.இந்த மையங்கள் மூலம், மொத்த வியா­பா­ரி­க­ளின்றி, மொபைல் போன்கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நேரடி விற்­பனை செய்­யப்­படும். இதனால், மொபைல் போன்கள், குறைந்த விலையில் கிடைக்கும். நிறு­வ­னத்தின் விற்­ப­னையில், விற்­பனை மையங்கள் வாயி­லான பங்­க­ளிப்பு, 25 – 30 சத­வீ­த­மாக உயர்த்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.
ஜியோமி நிறு­வனம், ஒவ்­வொரு காலாண்டும், 25 – 30 லட்சம் மொபைல் போன்­களை விற்­பனை செய்­கி­றது. இதில், 75 சத­வீத மொபைல் போன்கள், இந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை