வாடிக்­கை­யாளர் நம்­பிக்­கையை பெற கோடி­களை இழக்கும் நிறு­வ­னங்கள்

தினமலர்  தினமலர்
வாடிக்­கை­யாளர் நம்­பிக்­கையை பெற கோடி­களை இழக்கும் நிறு­வ­னங்கள்

புது­டில்லி: உல­க­ளவில், வாடிக்­கை­யா­ளர்­களை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கான திட்­டங்­களில், ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், கோடிக் கணக்­கான டாலர்­களை இழப்­பது, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது.
அசெஞ்சர் ஸ்டிரா­டஜி நிறு­வனம், 25 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான நுகர்­வோ­ரிடம், அவர்கள் வாங்கும், ‘பிராண்டு’ பொருட்கள் குறித்தும், அதே பிராண்டை, எவ்­வ­ளவு காலத்­திற்கு தொடர்ந்து பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­பது பற்­றியும் ஆய்வு மேற்­கொண்­டது. அதில், ஆய்வில் பங்­கேற்ற இந்­தி­யர்­களில், 86 சத­வீதம் பேர், கடந்த ஓராண்டில், ஒரு பிராண்டில் இருந்து, வேறு பிராண்டு பொருட்­க­ளுக்கு மாறி­யுள்­ளது தெரிய வந்­து உள்­ளது. அதனால், வாடிக்­கை­யா­ளர்­களை கவ­ரவும், தக்க வைத்துக் கொள்­ளவும், ரொக்கத் தள்­ளு­படி, பரிசு, இல­வச ‘ரீசார்ஜ்’ உள்­ளிட்ட, பல்­வேறு சலு­கை­க­ளுக்­காக, நிறு­வ­னங்கள் செல­வ­ழிக்கும் கோடிக் கணக்­கான டாலர் பணம், அதற்­கான இலக்கை அடை­யாமல் வீணா­வ­தாக, ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
தங்கள் தனிப்­பட்ட விப­ரங்­க­ளுக்கு பாது­காப்பு அளிக்கும் பிராண்­டு­க­ளுக்கு, தொடர்ந்து விசு­வா­ச­மாக உள்­ள­தாக, 81 சத­வீதம் பேர் தெரி­வித்து உள்­ளனர். குடும்­பத்­தினர், நண்­பர்கள் ஆகி­யோரை பின்­பற்றி, ஒரே பிராண்டு பொருட்­களை பயன்­ப­டுத்­து­வ­தாக, 62 சத­வீதம் பேர் கூறி­யுள்­ளனர். சமூ­க­நல ஆத­ரவு நிறு­வ­னங்­களின் பிராண்­டு­களை தொடர்ந்து பயன்­ப­டுத்­து­வ­தாக, 64 சத­வீ­தத்­தினர் தெரி­வித்து உள்­ளனர். சந்தை போட்டி, புதிய அறி­மு­கங்கள், கவர்ச்­சி­க­ர­மான சலு­கைகள், அதி­க­ரித்து வரும் மின்­னணு பயன்­பாடு போன்­ற­ வற்றால், நுகர்வோர், ஒரே பிராண்டு பொருட்­களில் விசு­வா­ச­மாக இருப்­பது குறைந்து வரு­வ­தாக, ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை