10வது ஐபிஎல் தொடர் ஏப்.5ல் தொடக்கம்; சன் ரைசர்ஸ்-ஆர்சிபி முதல் ஆட்டத்தில் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
10வது ஐபிஎல் தொடர் ஏப்.5ல் தொடக்கம்; சன் ரைசர்ஸ்ஆர்சிபி முதல் ஆட்டத்தில் மோதல்

மும்பை: 10வது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்காக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இருமுறை மோதுகிறது. தொடக்க ஆட்டம் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணி  மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. மே 14ம் தேதி வரை லீக்ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெறும். மே 21ம் தேதி இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் இறுதிபோட்டி நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டிக்காக வீரர்கள் ஏலம் வரும் 20ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தேதி     அணிகள்                     நேரம்            இடம்
ஏப். 5     சன்ரைசர்ஸ் - பெங்களூரு    8 மணி     ஐதராபாத்
ஏப். 6       புனே - மும்பை              8 மணி     புனே
ஏப். 7     குஜராத் - கொல்கத்தா       8 மணி     ராஜ்கோட்
ஏப். 8     பஞ்சாப் - புனே       4 மணி     இந்தூர்
    பெங்களூர் - தில்லி        8 மணி         பெங்களூரு
ஏப். 9    சன்ரைசர்ஸ் - குஜராத்        4 மணி     ஐதராபாத்
    மும்பை - கொல்கத்தா        8 மணி         மும்பை
ஏப். 10    பஞ்சாப் - பெங்களூர்       8 மணி     இந்தூர்
ஏப். 11    புனே - தில்லி        8 மணி     புனே
ஏப். 12    மும்பை - சன்ரைசர்ஸ்       8 மணி     மும்பை
ஏப். 13     கொல்கத்தா - பஞ்சாப்        8 மணி     கொல்கத்தா
ஏப். 14     பெங்களூர் - மும்பை        4 மணி     பெங்களூரு
    குஜராத் லயன்ஸ் - புனே    8 மணி     ராஜ்கோட்
ஏப். 15    கொல்கத்தா - சன்ரைசர்ஸ்   4 மணி     கொல்கத்தா
    தில்லி - பஞ்சாப்       8 மணி     தில்லி
ஏப். 16     மும்பை - குஜராத்        4 மணி         மும்பை
    பெங்களூர் - புனே        8 மணி     பெங்களூரு
ஏப். 17     தில்லி - கொல்கத்தா        4 மணி     தில்லி
    சன்ரைசர்ஸ் - பஞ்சாப்,        8 மணி     ஐதராபாத்
ஏப். 18    குஜராத் - பெங்களூர்,        8 மணி         ராஜ்கோட்
ஏப். 19     சன்ரைசர்ஸ் - தில்லி        8 மணி     ஐதராபாத்
ஏப். 20     பஞ்சாப் - மும்பை       8 மணி     இந்தூர்
ஏப். 21    கொல்கத்தா - குஜராத்       8 மணி     கொல்கத்தா
ஏப். 22    தில்லி - மும்பை       4 மணி     தில்லி
    புனே - சன்ரைசர்ஸ்        8  மணி   புனே
ஏப். 23    குஜராத் - பஞ்சாப்,        4 மணி    ராஜ்கோட்
    கொல்கத்தா - பெங்களூர்    8 மணி    கொல்கத்தா
ஏப். 24    மும்பை - புனே        8 மணி    மும்பை
ஏப். 25    பெங்களூர் - சன்ரைசர்ஸ்    8 மணி    பெங்களூரு
ஏப். 26    புனே - கொல்கத்தா       8 மணி    புனே
ஏப். 27    பெங்களூர்- குஜராத்       8 மணி        பெங்களூரு
ஏப். 28    கொல்கத்தா - தில்லி        4 மணி    கொல்கத்தா
    பஞ்சாப்- சன்ரைசர்ஸ்        8 மணி    மொஹாலி
ஏப். 29    புனே - பெங்களூர்        4 மணி    புனே
    குஜராத் - மும்பை        8 மணி    ராஜ்கோட்
ஏப். 30    பஞ்சாப் - தில்லி        4 மணி    மொஹாலி
    சன்ரைசர்ஸ் - கொல்கத்தா   8 மணி    ஐதராபாத்
மே 1    மும்பை - பெங்களூர்       4 மணி        மும்பை
    புனே -  குஜராத்        8 மணி         புனே
மே 2    தில்லி - சன்ரைசர்ஸ்       8 மணி        தில்லி
மே 3    கொல்கத்தா - புனே       8 மணி        கொல்கத்தா
மே 4    தில்லி - குஜராத்        8 மணி        தில்லி
மே 5    பெங்களூர் - பஞ்சாப்       8 மணி       பெங்களூரு
மே 6    சன்ரைசர்ஸ் - புனே,        4 மணி       ஐதராபாத்
    மும்பை - தில்லி        8 மணி       மும்பை
மே 7    பெங்களூர் - கொல்கத்தா    4 மணி       பெங்களூரு
    பஞ்சாப் - குஜராத்       8 மணி        மொஹாலி
மே 8    சன்ரைசர்ஸ் -  மும்பை     8 மணி        ஐதராபாத்
மே 9    பஞ்சாப் - கொல்கத்தா        8 மணி   மொஹாலி
மே 10    குஜராத் - தில்லி        8 மணி       கான்பூர்
மே 11    மும்பை - பஞ்சாப்       8 மணி        மும்பை
மே 12    தில்லி - புனே       8 மணி   தில்லி
மே 13    குஜராத் - சன்ரைசர்ஸ்,        4 மணி    கான்பூர்
    கொல்கத்தா - மும்பை       8 மணி         கொல்கத்தா
மே 14    புனே - பஞ்சாப்       4 மணி        புனே
    தில்லி - பெங்களூர்       8 மணி         தில்லி
மே 16    தகுதி 1    8 மணி       ------
மே 17    எலிமினேட்டர்       8  மணி    ------
மே 19    தகுதி 2    8 மணி       ------
மே 21    இறுதி ஆட்டம்       8 மணி        ஐதராபாத்

.

மூலக்கதை