தென்ஆப்ரிக்க தொடர் மார்டின் கப்டில் விலகல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென்ஆப்ரிக்க தொடர் மார்டின் கப்டில் விலகல்

வெலிங்டன்: தென்ஆப்ரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே ஒரு டி. 20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் டி. 20 போட்டி வரும் 17ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மார்டின் கப்தில் தொடையில் காயம் காரணமாக டி20 போட்டி மற்றும் முதல் இரு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக டி20 போட்டிக்கு 20 வயதான கிளென் பிலிப்ஸ்சும், ஒருநாள் போட்டிக்கு டீன் பிரவுலினும் சேர்க்கப்பட்டுள்ளனர்.



.

மூலக்கதை