இங்கிலாந்து அணி டெஸ்ட் கேப்டனாக நியமனம்; கோஹ்லியை போல் ரூட் செயல்பட வேண்டும் - வாகன் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து அணி டெஸ்ட் கேப்டனாக நியமனம்; கோஹ்லியை போல் ரூட் செயல்பட வேண்டும்  வாகன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தவர் அலஸ்டைர் குக். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-0 என படுதோல்வி அடைந்ததால் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக குக் நியமிக்கப்பட்டுள்ளார். 2015ல் இருந்து ஜோ ரூட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து அணி அடுத்ததாக ஜூலை மாதத்தில் தான் தென்ஆப்ரிக்க அணியுடன் டெஸ்ட்டில் விளையாட உள்ளது.

அதில் ரூட் கேப்டன் பதவியை
ஏற்றுக்கொள்வார். இதனிடையே ரூட், இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தி உள்ளார்.


.

மூலக்கதை