ஜல்லிக்கட்டு…!!! அவசர சட்டம் கொண்டு வருகிறது தமிழக அரசு ?- ஓபிஎஸ் சூசகம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஜல்லிக்கட்டு…!!! அவசர சட்டம் கொண்டு வருகிறது தமிழக அரசு ? ஓபிஎஸ் சூசகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்தித்தபோது இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது , ஆனால் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று தெரிவித்த அடிப்படையில் விரைவில் மாநில அரசே ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை காரணம் காட்டி மாணவர்கள் போராட்டத்தை பெரிதாக்கி மாநில அரசு குளிர் காய்கிறது. இதை தமிழக அரசே அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தலாம். வழக்கு வந்தால் அதை சந்திக்கலாம். என்று திருமாவளவன் விமர்சித்திருந்தார்.

ஏற்கனவே திமுக அரசு இது போன்ற அவசர சட்டத்தை கொண்டு வந்தது, ஆகவே  தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதே கருத்தை சில வாரங்களுக்கு முன்னர் தமிழிசை தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு இதில் ஏன் தயக்கம் காட்டுகிறது ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கிறார் இங்கு போராடியும் அது நடக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் போட்டு சட்டம் கொண்டுவருகிறது.

ஆகவே அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் போது தமிழக அரசு ஏன் அதை செய்ய தவறுகிறது என்ற கேள்வி எழுந்த நிலையில் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தார்.அப்போது பிரதமர் மோடி உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையி உள்ளதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது, ஆனால் நீங்கள் எதாவது செய்யலாம் அதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்கிற ரீதியில் பதிலளித்துள்ளார்.

இதற்கு ஓபிஎஸ் மாநில அரசே அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பேசியதாக தெரிகிறது. பிரதமர் தரப்பிலிருந்து அதற்கு பச்சை கொடியும் காட்டியதாக டெல்லி வட்டாரங்கள்  தெரிவிக்கிறது.

இதன் மூலம் இன்று தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வரும் அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. அதைத்தான் டெல்லியில் ஓபிஎஸ் சூசமாக சிரித்தபடி விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தாக கூறுகிறார்கள்.

மூலக்கதை