சற்று முன் - A1 சாலையில் பேரூந்து விபத்து! - பலர் படுகாயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சற்று முன்  A1 சாலையில் பேரூந்து விபத்து!  பலர் படுகாயம்!!

சற்றுமுன் A1 சாலையில் இடம்பெற்றுள்ள விபத்தொன்றில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று வியாழக்கிழமை காலை Val-d'Oise இன் Roissy-en-France பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய மக்களை ஏற்றிவந்த இப்பேருந்தே விபத்துக்குள்ளானது. விபத்தின் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், 7 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் 21 பேர் மாற்று  வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் இன்று காலை Roissy-en-France யில் உள்ள A1 சாலையில் காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

மூலக்கதை