தமிழக அரசே அவசர சட்டம் இயற்றலாம்… இளைஞர்களே உங்களை திசை திருப்புகிறது தமிழக அரசு – சொல்கிறார் திருமாவளவன்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தமிழக அரசே அவசர சட்டம் இயற்றலாம்… இளைஞர்களே உங்களை திசை திருப்புகிறது தமிழக அரசு – சொல்கிறார் திருமாவளவன்

பிரச்சனையை மத்திய அரசின் மீது போட்டு குளிர்காஅய்கிறது மாநில அரசு , போராடும் இளைஞர்களை திசை திருப்பி குளிர்காய்கிறது தமிழக அரசு என்று திருமா வளவன் பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

திருமா பிரதமரின் இந்த பதில் இப்படித்தான் இருக்கும் , எதிர்பார்த்த ஒன்றுதான். வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இப்படித்தான் சொல்லுவார். ஆகவே  ஓரிரு நாள் போராட்டத்தில் மத்திய அரசை பணிய வைக்க வேண்டும் என்பது  சரியான அரசியல் போராட்டமாக நான் கருதவில்லை.

ஆனால் இன்று போராட்டம் ஒரு தொண்டு நிறுவனத்தை குறிவைத்து மட்டுமே நடத்தப்படுகிறது.  ஆனால் எப்படி போராட்டம் வேண்டும் மத்திய மாநில அரசுகளை நோக்கி போராட்டம்

தமிழக அரசு பல்வேறு காரணங்களுக்காக  இந்த போராட்டத்தை  ஊக்கப்படுத்துகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ஊக்கப்படுத்துவது தவறு. அவசர உள்நோக்கத்தோடு ஊக்கப்படுத்துவதாக நான் பார்க்கிறேன்.

தமிழக அரசே அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டை  நடத்தி இருக்கலாம். ஏன் தமிழக அரசு அவசரசட்டத்தை கொண்டு வந்து நடத்த கூடாது. ஏன் செய்யவில்லை. திமுக அரசு அதைத்தானே செய்தது. தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம் எங்களால் கொண்டுவர முடியாது நீங்கள் அவசர சட்டம் கொண்டு வந்து நடத்துங்கள் என்று மத்திய அரசு சொல்லியிருக்கும் போது அதை ஏன் செய்யவில்ல.

அதன் பிறகு வழக்கு வந்தால் அதை சந்திக்கலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை நடத்துகிறார். அதை ஏன் முதல்வர் ஓபிஎஸ் செய்ய முடியவில்லை.மாணவர்கள் தன்னியல்பாக ஜல்லிக்கட்டுக்கு போராட முன் வந்தார்கள் , அதை அரசு தனக்கு சாதகமாக மாற்றி போராட அனுமதித்து பிரச்சனையை தமிழக அரசு திட்டமிட்டு திசை திருப்பி விட்டுள்ளனர்.

50 பேராக போராடிய மாணவர்களை அழைத்து பேசி முடித்து வைக்காமல் பெரிதாக வளரவிட்டு குளிர்காய்கிறார்கள் . இதில் தமிழக அரசின் பல்வேறு பிரச்சனைகள் , அவர்கள் உட்கட்சி பிரச்சனைகள் மறைக்கப்பட்டுவிட்டது. சாதாரணமாக தமிழக அரசே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து நடத்தும் வாய்ப்பு இருக்கும் போது மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை திசை திருப்பி இவர்கள் குளிர்காய்கிறார்கள். போராடும் இளைஞர்கள் அரசியல் நோக்கோடு போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் . இவ்வாறுய் திருமாவளவன் கூறினார்.

மூலக்கதை