‘யோகா பவர்’ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரை மல்யுத்தத்தில் வீழ்த்திய பாபா ராம்தேவ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘யோகா பவர்’ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரை மல்யுத்தத்தில் வீழ்த்திய பாபா ராம்தேவ்

மும்பை: புரோ மல்யுத்த லீக் (பி. டபிள்யூ. எல்) 2வது சீசன் தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில், இந்தியாவை சேர்ந்த யோகா குரு பாபா ராம்தேவும், உக்ரைன் நாட்டை சேர்ந்த மல்யுத்த வீரர் ஆண்ட்ரே ஸ்டேட்னிக்கும் மோதினர்.

இதில், 12-0 என பாபா ராம்தேவ் வெற்றி பெற்றார். அவரிடம் தோல்வியை சந்தித்த ஆண்ட்ரே ஸ்டேட்னிக் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரே ஸ்டேட்னிக் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில், இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களில் ஒருவரான சுஷில் குமாரை வீழ்த்தியவர்.

ஆண்ட்ரே ஸ்டேட்னிக் இறுதி போட்டிக்கு முன்னேறியதால் கிடைத்த ‘ரிபிசாஜ்’ என்ற வாய்ப்பின் மூலம்தான் சுஷில்குமார் அந்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து விளையாடி வெண்கல பதக்கம் வென்றார்.

இதனிடையே ஆண்ட்ரே ஸ்டேட்னிக்குடனான போட்டி தொடங்கும் முன்பாக பாபா ராம்தேவ், சூரிய நமஸ்காரம் செய்தார்.

இது குறித்து பேசிய பாபா ராம்தேவ், ‘வருங்காலத்தில் மல்யுத்தம் மிகவும் புகழ்பெறும் எனவும், உலகில் அதிகம் பின்பற்றப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும்’ எனவும் கூறினார்.  

.

மூலக்கதை