ஸ்ரேயா-காஜல் கவர்ச்சி போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ரேயாகாஜல் கவர்ச்சி போட்டி

தெலுங்கு படவுலகில் ஸ்ரேயா, காஜலுக்கு முற்றிலுமாகவே பட வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியிருந்தது. அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் இந்த பொங்கல் திருநாள் அமைந்துவிட்டது.

கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அதேபோல் கவுதமிபுத்ரா சட்டகாரனி பிரமாண்ட சரித்திர படத்தில் என். டி. பால கிருஷ்ணா ஜோடியாக ஸ்ரேயா நடித்திருக்கிறார்.

இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் ஆந்திராவில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இது காஜல், ஸ்ரேயா இருவருக்கும் புது உற்சாகத்தை அளித்திருக்கிறது.

வயதான கதாபாத்திரங்கள் வந்தாலும் நடிக்க தயார் என்று சில நாட்களுக்கு முன் கூறி வந்த ஸ்ரேயா தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு கவர்ச்சியாக நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதற்கு பச்சை கொடி காட்டும் வகையில் காலண்டர் ஒன்றிற்கு தொடை அழகை காட்டியபடி போஸ் தந்து அசத்தியிருக்கிறார்.

அதேபோல் காஜல் அகர்வாலும் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திருக்கிறார். அவர்களுடன் பிரணிதாவும் நீச்சல் குளம் அருகில் அமர்ந்தபடி கிளாமர் போஸ் தந்து கிக் ஏற்றியிருக்கிறார்.

இது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


.

மூலக்கதை