என் அடையாளம் #ஜல்லிக்கட்டு, 'கெட் லாஸ்ட் பீட்டா': ஏ.ஆர். முருகதாஸ் கோபம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என் அடையாளம் #ஜல்லிக்கட்டு, கெட் லாஸ்ட் பீட்டா: ஏ.ஆர். முருகதாஸ் கோபம்

சென்னை: தொலைந்து போ பீட்டா என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திரையுலக பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

என் அடையாளம் #ஜல்லிக்கட்டு#Get lost PETAஎன் கலாச்சாராம் காக்க துணை நிற்பேன்! களம் நிற்ப்பேன்!!

என் அடையாளம் #ஜல்லிக்கட்டு#Get lost PETAஎன் கலாச்சாரம் காக்க துணை நிற்பேன்! களம் நிற்ப்பேன்!! என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Maybe #jallikattu wouldn't have been banned if some people were able to make money with it like in IPL! #ISupportJallikattu

ஐபிஎல் போன்று சிலரால் பணம் சம்பாதிக்க முடிந்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படாமல் இருந்திருக்கும் என நடிகர் சிபி ராஜ் தெரிவித்துள்ளார்.

முதல் ஆளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார் சிம்பு. மேலும் தன் வீட்டு வாசலில் நின்று மௌன போராட்டமும் நடத்தி பிறரும் போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தினார்.

ஜல்லிக்கட்டுக்கு நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல் ஹாஸனும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

மூலக்கதை