நவிகோவுடன் படகுப்பேருந்துப் பயணம்!! பரிசிற்குள் நதிப் போக்குவரத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
நவிகோவுடன் படகுப்பேருந்துப் பயணம்!! பரிசிற்குள் நதிப் போக்குவரத்து!!

இன்றிலிருந்து, செய்ன் நதியில் பயணிக்கும் படகுப் பேருந்துச் சேவையான, Batobus இல் வருடாந்த நவிகோ அட்டை வைத்திருப்பவர்கள் எத்தனை தரமும் பயணிக்க முடியும். இதற்காக இவர்களிடம் மாதாந்தம் 3€ மட்டுமே அறவிடப்படும்.
 
 
பரிசின் société parisienne  நிறுவனத்தின், எட்டுப் படகுப் பேருந்துகள், செயன் நதியில், பரிஸ் 15 இல் Beaugrenelle இலிருந்து, பரிஸ் 5இல் உள்ள Jardin des Plantes வரையாக, ஒன்பது தரிப்பிடங்களில் நிறுத்தப்படும். காலை 10h00 மணிக்கு ஆரம்பிக்கப்டும் இந்தப் படகுப் பேருந்துச் சேவை, மாலை 17h00 மணிவரை, ஒவ்வொரு 40 நிமிடத்திற்கும் ஒன்றாக இயக்கப்படும்.
 
 
 
இந்தப் படகுப் பேருந்திற்கான  வருடாந்தக் கட்டணமானது, இதுவரை 60€ வாக இருந்தது. இது இன்றிலிருந்து 40€ வாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சம்மேளனமான Stif தெரிவித்துள்ளது.
 
 
இந்தச் சேவையின் மூலம் வருடாந்தம் 2 மில்லியன் பேர் பயணம் செய்கின்றனர் எனவும், செய்ன் நதியின் போக்குவரத்தையும், பரிசிற்குள்ளான ஒரு போக்குவரத்து முறைமையாக உபயோகிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும், இல்-து-பிரான்சின் போக்குவரத்துச் சம்மேளனத்தின் தலைவியும், இல்-து-பிரான்சின் தலைவியுமான வலரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.
 
 

மூலக்கதை