பைரவா 4 நாளில் 100 கோடி வசூலா ?

PARIS TAMIL  PARIS TAMIL
பைரவா 4 நாளில் 100 கோடி வசூலா ?

 ஹிந்தித் திரையுலகத்தை ஆட்டிப் படைத்து வரும் '100 கோடி கிளப்' பேராசை தமிழ்த் திரையுலகத்திலும் தற்போது அதிகமாகியிருக்கிறது. முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் என்றாலே எத்தனை நாளைக்குள் 100 கோடி ரூபாய் வசூல் என்று சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வெளி வரும் படங்களின் வியாபார வட்டம் அதிகமாகிவிட்டது.

 
அதற்கடுத்து வந்த 'கத்தி, தெறி' ஆகிய படங்கள் 100 கோடி வசூலித்ததாகச் சொன்னார்கள். ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், கடந்த வாரம் வெளிவந்த 'பைரவா' படம் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்தியும் உள்ளார்கள். அதே சமயம், தமிழ்நாட்டில் எவ்வளவு?, மற்ற இடங்களில் எவ்வளவு என்ற வசூலை அவர்கள் தெரிவிக்கவில்லை.
 
படத்தின் விளம்பரங்களிலேயே இதை அறிவித்துவிட்டதால் விஜய் ரசிகர்களும் 'பைரவா 100 கோடி' என கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் முதல் நாளில் சுமார் 15 கோடி வசூல் என்றார்கள். அப்படிப் பார்த்தால் 4 நாட்களில் 60 கோடி ரூபாய்தான் வசூலித்திருக்கும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் 40 கோடி வசூலித்திருந்தால்தான் 4 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்க முடியும்.
 
படத்தின் விளம்பரத்திலேயே 4 நாட்களில் 100 கோடி என்று சொல்லிவிட்டதால், அந்த 100 கோடிக்கு ஒரு கணக்கைச் சொல்லிவிட்டால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

மூலக்கதை