டைரக்டர் சுராஜை திட்டி தீர்த்தாலும் நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியாக வந்த தமன்னா

தமிழ் முரசு  தமிழ் முரசு
டைரக்டர் சுராஜை திட்டி தீர்த்தாலும் நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியாக வந்த தமன்னா

விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் தமன்னா. இப்படத்தின் இயக்குனர் சுராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‘நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

உடைகளை குறைத்துக் கொள்ளவே அவ்வளவு சம்பளம் தரப்படுகிறது. கமர்ஷியல் படங்களில் அவர்களை கவர்ச்சியாகவே பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

என் படங்களில் ஹீரோயின்களை கவர்ச்சிக்காகவே பயன்படுத்துகிறேன்’ என்று கருத்து தெரிவித்தார். தமன்னாவைத்தான் இயக்குனர் சுட்டிக்காட்டுவதாக புகார் எழுந்தது.

இயக்குனரின் கருத்துக்கு நயன்தாரா, தமன்னா கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காசுக்காக நடிகைகள் ஆடை அவிழ்ப்பவர்கள் அல்ல என்று சுராஜுக்கு சூடு போட்டார் நயன்தாரா.

இது பரபரப்பானது. இதையடுத்து தனது கருத்துக்கு சுராஜ் மன்னிப்பு கேட்டார்.

இந்த பிரச்னைக்கு பிறகு ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடிப்பதை குறைத்துக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்றார். அதில் தொடை பளிச்சிடும்படியான கவர்ச்சி உடை அணிந்து அவர் வந்திருந்தார்.

இது அங்கிருந்தவர்களின் கவனத்தை கவர்ந்தது. ‘சினிமாவில் ஹீரோயின்களுக்கிடையே முன்னணி இடத்தை பிடிக்கும் போட்டி நிலவும்வரை கவர்ச்சியாக நடிப்பதை தவிர்க்க முடியாது’ என்று சிலர் முணுமுணுத்தனர்.

தனது புதிய தோற்றத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் விதவிதமாக படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார் தமன்னா.

.

மூலக்கதை