இந்­தி­யாவில் தொழில் துவங்க அன்­னி­யர்கள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
இந்­தி­யாவில் தொழில் துவங்க அன்­னி­யர்கள் ஆர்வம்

மும்பை : ‘வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் சார்­பாக, இந்­தி­யாவில் பணி­யாற்ற வருவோர், இங்கு தொழில் துவங்க ஆர்­வ­மாக உள்­ளனர்; இத்­த­கையோர், ஆசிய – பசிபிக் பிராந்­தி­யத்­தி­லேயே, இந்­தி­யாவில் தான் அதிகம் உள்­ளனர்’ என, எச்.எஸ்.பி.சி., ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.
அதன் விபரம்: தாய் நாட்டு நிறு­வனம் சார்­பாக, பிற நாடு­க­ளுக்குச் சென்று பணி­யாற்றி வரும், 26,871 பேரிடம், கடந்த ஆண்டு, ஏப்., – மே மாதங்­களில், ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. நுாற்­றுக்கும் மேற்­பட்ட நாடு­களில் நடத்­தப்­பட்ட இந்த ஆய்வில், இந்­தி­யாவில் வர்த்­தகம் துவங்க, 10 பேருக்கு ஒருவர் வீதம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். இது, ஆசிய – பசிபிக் பிராந்­தி­யத்தின் சரா­ச­ரி­யான, ஐந்து பேரை விட, இரு மடங்கு அதிகம். பஹ்ரைன், ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் உள்­ளிட்ட, மத்­திய கிழக்கு நாடு­களை விடவும், இந்­தி­யாவில் தொழில் துவங்க, அதி­க­மானோர் ஆர்­வ­மாக உள்­ளனர். மூன்றில் இரண்டு பங்­கினர், இந்­திய பொரு­ளா­தா­ரத்தின் மீது, அதிக நம்­பிக்கை உள்­ள­தாக தெரி­வித்து உள்­ளனர்.
ஆய்வில் பங்­கேற்ற, இந்­தி­யாவில் உள்ள வெளி­நாட்டு பணி­யா­ளர்­களில், 53 சத­வீ­தத்­தினர், நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்மை உறு­தி­யாக இருக்கும் என, கூறி­யுள்­ளனர். இதர, ஆசிய – பசிபிக் நாடு­களை விட, இந்­தி­யாவில் அதிகம் சேமிக்க முடி­வ­தாக, 44 சத­வீ­தத்­தி­னரும், நீண்ட கால சேமிப்பு மற்றும் முத­லீ­டு­க­ளுக்கு ஏற்­ற­தாக உள்­ளது என, 39 சத­வீதம் பேரும் கூறி­யுள்­ளனர். இந்­தி­யாவில் பணி­யாற்றும், வெளி­நாட்டு நிறு­வ­னத்தைச் சேர்ந்த ஒருவர், சரா­ச­ரி­யாக, ஆண்­டுக்கு, 1,45,057 டாலர் வருவாய் ஈட்­டு­கிறார்; இது, சர்­வ­தேச சரா­ச­ரி­யான, 97,419 டாலரை விட அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
உல­க­ளவில், மிகச் சிறந்த வெளி­நாட்டு பணி­யிடம் குறித்த கேள்­விக்கு, ஐரோப்­பாவைச் சேர்ந்த சுவிட்­சர்­லாந்து, ஜெர்­மனி ஆகிய நாடு­களை, பெரும்­பான்­மை­யானோர் தேர்வு செய்­துள்­ளனர். சிறந்த பணிச் சூழல் உள்ள, ஸ்வீடன், நார்வே, ஆஸ்­தி­ரியா, பிரிட்டன் உள்­ளிட்ட, 10 நாடு­களில் பணி­யாற்ற, பலர் விருப்பம் தெரி­வித்துள்­ளனர்.

மூலக்கதை