ரியல் எஸ்டேட் துறை கடும் பாதிப்பு; குடி­யி­ருப்­புகள் விற்­பனை 50 சத­வீதம் வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
ரியல் எஸ்டேட் துறை கடும் பாதிப்பு; குடி­யி­ருப்­புகள் விற்­பனை 50 சத­வீதம் வீழ்ச்சி

புது­டில்லி : மத்­திய அரசின், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், கறுப்புப் பணப்­பு­ழக்கம் பெரு­ம­ளவு குறைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக, அதி­க­ளவில் கறுப்புப் பணம் புழங்கி வந்த, ரியல் எஸ்டேட் துறை கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு உள்­ளது.
கடந்த ஆண்டு, அக்., – டிச., வரை­யி­லான காலாண்டில், குடி­யி­ருப்­புகள் விற்­பனை, 50 சத­வீதம் வீழ்ச்­சி­ய­டைந்து உள்­ளது. இனி, ரியல் எஸ்டேட் துறை வர்த்­தகம் அனைத்தும், வெளிப்­ப­டை­யாக, காசோலை, மின்­னணு பரி­வர்த்­தனை போன்­ற­வற்றின் மூலம் நடை­பெறும் சூழல் உரு­வாகி உள்­ளது.
இழப்பு அதனால், ‘வெள்ளை’ பணத்தில், அதா­வது, முறை­யாக கணக்கு காட்­டப்­பட்ட பணம் மூலம் நிலம், குடி­யி­ருப்பு ஆகி­ய­வற்றை வாங்­கு­வோரை, ரியல் எஸ்டேட் துறை­யினர் எதிர்­நோக்கி உள்­ளனர். ஆனால், நிலம், குடி­யி­ருப்பு ஆகி­ய­வற்றின் விலை மேலும் குறையும் என, வாங்­குவோர் காத்­தி­ருக்­கின்­றனர். வங்­கிகள், வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்­டியை மேலும் குறைக்கும் என்ற எதிர்­பார்ப்பின் கார­ண­மா­கவும், அவர்கள் வீடு வாங்கும் திட்­டத்தை தள்ளி வைத்­துள்­ளனர். இதனால், குறிப்­பாக, கட்­டு­மான நிறு­வ­னங்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு உள்­ளன.
‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், பத்­தி­ரப்­ப­திவும் வீழ்ச்சி கண்­டுள்­ளது. இந்த நடை­மு­றை­களில், 22,600 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக, கட்­டு­மான நிறு­வ­னங்கள் மதிப்­பிட்­டுள்­ளன; மாநில அர­சு­க­ளுக்கு, 1,200 கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக, முத்­திரைத் தாள் கட்­டண வருவாய் குறைந்­துள்­ளது’ என, சொத்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘கினைட் பிராங்க் இந்­தியா’ தெரி­வித்­துள்­ளது. புதிய குடி­யி­ருப்­புகள் மட்­டு­மின்றி, பழைய வீடுகள் விற்­ப­னையும் பெரு­ம­ளவு சரி­வ­டைந்து உள்­ளது.
பழைய வீடு­களின் பெரும்­பான்மை விற்­பனை, ரொக்­கத்தில் தான் நடை­பெ­று­கி­றது. இதில் தான், அதி­க­ளவில் கறுப்புப் பணம் புழங்கி வந்­தது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், பழைய வீடுகள் விற்­பனை அடி­யோடு முடங்­கி­உள்­ளது.
சரிவை தடுக்க‘கடந்த, 2016ல், அக்., – டிச., வரை­யி­லான காலாண்டில், சென்னை, டில்லி, மும்பை உள்­ளிட்ட எட்டு முக்­கிய நக­ரங்­களில், வீடு விற்­பனை, 2015ம் ஆண்டின் இதே காலாண்டில் மேற்­கொள்­ளப்­பட்­டதை விட, 44 சத­வீதம் குறைந்­துள்­ளது; புதிய கட்­டு­மான திட்­டங்­களும், 61 சத­வீதம் குறைந்­துள்­ளன’ என, கினைட் பிராங்க் அறிக்கை தெரி­விக்­கி­றது. ரியல் எஸ்டேட் துறையின் இந்த சரிவை தடுக்­கவும், பத்­தி­ரப்­ப­திவு வரு­வாயை அதி­க­ரிக்­கவும், பல மாநி­லங்கள், நில வழி­காட்டி மதிப்பு, முத்­திரைத் தாள் கட்­டணம் ஆகி­ய­வற்றை குறைப்­பது குறித்து, ஆலோ­சித்து வரு­கின்­றன.
மத்­திய அரசின், புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்­கு­முறை சட்டம், பினாமி சொத்­துகள் சட்டம் ஆகி­யவை, இனி, ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பணப்­பு­ழக்­கத்தை அடி­யோடு முடி­வுக்கு கொண்டு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நகரம் வீடு விற்­பனை சரிவுடில்லி, என்.சி.ஆர்., 53மும்பை 50பெங்­க­ளூரு 45ஐத­ராபாத் 40புனே 35சென்னை 31கோல்­கட்டா 20(2016 அக்., – டிச., வரை சத­வீ­தத்தில்)

மூலக்கதை