சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளுக்கு புதிய மொபைல் ‘ஆப்’ அறி­முகம்

தினமலர்  தினமலர்
சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளுக்கு புதிய மொபைல் ‘ஆப்’ அறி­முகம்

புது­டில்லி : சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்கள் தொடர்­பான, விரி­வான தக­வல்­களை பெற, ‘எஸ்.இ.இசட்., இந்­தியா’ எனும் மொபைல் போன் செய­லியை, மத்­திய வர்த்­தக துறை அமைச்­சகம் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இது குறித்து, மத்­திய வர்த்­தக துறை அமைச்­சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: மின் ஆளுமை திட்­டத்தின் கீழ், சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்கள் தொடர்­பான விரி­வான தக­வல்­களை, ‘எஸ்.இ.இசட்., இந்­தியா’ ஆப் மூலம் பெறலாம். இந்த அப்­ளி­கே­ஷனை, அனைத்து, ‘ஆண்­டு­ராய்டு’ மொபைல் போன்­க­ளிலும் பதி­வி­றக்கம் செய்து கொள்­ளலாம். இதன் மூலம், சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களை நிர்­வ­கிப்போர் மற்றும் அவற்றில் இணைந்­துள்ள நிறு­வ­னங்கள், தங்கள் தக­வல்­களை, எளிதில் அறிய முடியும்; தங்கள் நட­வ­டிக்­கை­களை, ஆன்லைன் சிஸ்டம் மூலம் கண்­கா­ணிக்க முடியும்; அனைத்து பரி­மாற்­றங்­க­ளையும், டிஜிட்டல் முறையில் மேற்­கொள்ள முடியும். இந்த ஆப் மூலம், ஏற்­று­ம­தி­யா­ளர்கள் மற்றும் இறக்­கு­ம­தி­யா­ளர்கள், சரக்கு போக்­கு­வ­ரத்து தக­வல்­களை, துல்­லி­ய­மாக கண்­கா­ணிக்க முடியும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை