புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம் பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம் பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் மலை­யக தமிழ் மக்­க­ளுக்கு உரிய இடம்பெற்றுக் கொடுக்­கப்­படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய மொழிகள் சமூக மேம்­பாட்டு சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நுவ­ரெ­லி­யாவில் நேற்று இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசு­கையில், 2016 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்­பெற்ற தைப்­பொங்கல் விழா இந்த ஆண்­டு மலை­ய­கத்தில் இடம்­பெ­று­வது போல, அடுத்த ஆண்டில் கிழக்கு மாகா­ணத்தில் இடம்­பெறும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற வடக்கு, கிழக்கு, மலை­யக மக்கள் வாக்­க­ளித்­ததன் பயனை இன்று அனு­ப­விக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. அவரின் வெற்­றியில் மலை­ய­கத்­துக்கு பாரிய பங்­க­ளிப்பும் இருக்­கின்­றது. அதற்­கு­ரிய அந்­தஸ்து தரப்­பட்டு இன்று தேசிய பொங்கல் விழா மலை­ய­கத்தில் நடை­பெற்­றுள்­ளது.

மலை­யக மக்­களை ஒரு காலத்தில் யாரும் கண்டு கொள்­ள­வில்லை. இவர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டவர் களாகவே இருந்து வந்­தார்கள். இன்று அந்த நிலைமை இல்லை. அமைச்சர் திகா, நான், அமைச்சர் ராதா ஊடாக உரிய இடம் வழங்­கப்­பட்டு அபி­வி­ருத்திப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மலை­யகம் கிள்ளு கீரை என்று யாரும் எண்­ணி­விடக் கூடாது. மலை­யக மக்­களை யாரும் ஒதுக்கி வைக்­கவும் முடி­யாது. அவர்கள் இலங்கைத் தமி­ழர்கள் என்ற அந்­தஸ்தைப் பெற்­றுள்­ளார்கள். இன்று தமிழ் முற்­போக்கு கூட்­டணி நாக­ரி­க­மா­கவும் நவீ­ன­மா­கவும் அதன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அந்த வகையில் அமைச்சர் திகாம்­பரம் இந்த ஆண்டில் 10 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றார். அந்த வீடு­க­ளுக்கு அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்தின் மூலம் உறு­தி­களும் பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வு­ள்ளன. மேலும் மலை­யக பெருந்­தோட்­டங்­களில் இரண்டு மூன்று ஏக்கர் காணி­களை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளித்து அவர்­களை சிறு தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக ஆக்­கவும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.

மலை­யக இனம் தேசிய இன­மாக ஐக்­கி­யப்­பட்டு வரு­கின்­றது. ஐக்­கியம் என்று சொல்லும் போது அடி­மைத்­தனம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஏனைய இனங்­க­ளுக்கு இணை­யா­க­ செ­யற்­பட்டு வரு­கின்றோம் என­பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாட்டில் புதிய அர­சி­ய­ ய­ல­மைப்பு உரு­வாக்கம் இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த நேரத்தில் மலை­யக மக்­க­ளுக்கு உரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவ­சி­ய­மாகும். அந்தக் குழுவில் நானும் இருப்­பதால் மலையக தமிழ் மக்­க­ளுக்கு உரிய இடத்தை­பெறுக் கொடுப்பேன்.

எமது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முயற்­சியால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­துள்­ளது.அதன் ஊடாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அம்பாந்தோட்டை, வெல்லவாய, போந்தார பகுதிகளில் உள்ளது போல மலையகத்திலும் கைத்தொழில் பேட்டிகளை அமைத்துக் கொடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை