பிக் பாஷ் டி20 தொடர் அரை இறுதியில் சிட்னி சிக்சர்ஸ்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் அரை இறுதியில் விளையாட சிட்னி சிக்சர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதிய சிட்னி சிக்சர்ஸ், 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. டாசில் வென்ற சிட்னி முதலில் பந்துவீச, மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. ராப் குயினி 35, லூக் ரைட் 62, கெவின் பீட்டர்சன் 39 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து வென்றது. டேனியல் ஹியூஸ் 34, ஷான் அபாட் 33* (17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), போத்தா 25, கேப்டன் ஹென்ரிக்ஸ் 20 ரன் எடுத்தனர். அபாட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை