‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி

FILMI STREET  FILMI STREET
‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி

ஜல்லிக்கட்டுக்கு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.

நாளை நடைபெற உள்ள இப்போட்டியை துவங்க வைக்க இன்று இரவு மதுரை செல்லவிருக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்றாக தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு வந்த உடன் நடத்தி விடமுடியாது. அதற்கான நேரம் எல்லாம் பார்க்க வேண்டும்.

ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் இது அவசர சட்டம் மட்டும்தான். நிரந்தர சட்டம் வரும்வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதே கருத்தை மெரினாவில் போராடும் புரட்சி இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் காட்சிப்படுத்தப்படாத விலங்காக காளையை அறிவிக்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும்.

அதுவரை போராட்டக்காரர்கள் யாரும் கலைய வேண்டாம் என அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இதுபோன்றே கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் போராடும் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை