ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில்  பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 
கொழும்பு காலி முகத்திடலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
 
தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
 
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இலங்கை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த  நிலையில் இலங்கையிலும் தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதேவேளை,ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டம்முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

மூலக்கதை