புற்றுநோய் பாதிப்பு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட யுவராஜ்சிங்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புற்றுநோய் பாதிப்பு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட யுவராஜ்சிங்

புவனேஸ்வர்: இந்தியா-இங்கிலாந்து இடையே கட்டாக்கில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில், 127 பந்தில், 21 பவுண்டரி, 3 சிக்சருடன் 150 ரன் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின் அவர் சதம் அடித்துள்ளார்.

3வது ஒருநாள் போட்டிக்காக கொல்கத்தா செல்லும்  முன் புவனேஸ்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்த யுவராஜ்சிங், அவர்களுடன் செல்லமாக விளையாடி நேரத்தை செலவிட்டார்.

ஏற்கனவே 2012ம் ஆண்டு அவருடைய நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இதனால் மனஇறுக்கத்துக்குள்ளாகி அவதிப்பட்டு வந்த யுவராஜ்சிங் தற்போது அதில் இருந்து விடுபட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தேபாசிஷ்மொகந்தி, சிவசுந்தர்தாஸ் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை ஓட்டலுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை