பிறப்பு வீதம் வீழ்ச்சி - ஆனால் சனத்தொகை அதிகரிப்பு- அதிர்ச்சி தகவல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிறப்பு வீதம் வீழ்ச்சி  ஆனால் சனத்தொகை அதிகரிப்பு அதிர்ச்சி தகவல்!!

மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையில், பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் மிக கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரான்சின் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு ஒன்று குறித்த செய்தியினை இருநாட்கள் முன்னர் வெளியிட்டிருந்தோம். Insee அந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வின் படி 66.9 மில்லியன் மக்கள் பிரான்சில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர கடந்த 2016 ஆம் ஆண்டில் 785,000 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் எண்ணிக்கையில் 14,000 குறைவாகும். இந்த வீழ்ச்சியானது, நடப்பு ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1.94 வீதம் 2015 ஆம் ஆண்டிலும், 2 வீதம் 2014 ஆம்  ஆண்டிலும் சரிந்துள்ளது. மேலும் ஐரோப்பாவில் குழந்தை பெறுவதில் மிக வளமான நாடாக அயர்லாந்து தேர்வாகியுள்ளது. 
 
மேலும் மிக முக்கியமாக பிரான்சில், சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 வீதத்தில் இருந்து 19.2 வீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85.4 வயதாகவும், ஆண்களுக்கு 79.3 ஆகவும் உள்ளது. பிறப்பு வீதம் குறைந்தும், இறப்பு வீதம் அதிகரித்ததாலும் பிரான்சின் மக்கள் தொகை 0.4 வீதத்தால் அதிகரித்துள்ளமை பெரும் அதிர்வுக்கு உள்ளாகியுள்ளது.

மூலக்கதை