லக் ஷ்மி விலாஸ் பேங்க் வருவாய் ரூ.879 கோடி

தினமலர்  தினமலர்
லக் ஷ்மி விலாஸ் பேங்க் வருவாய் ரூ.879 கோடி

புது­டில்லி : லக் ஷ்மி விலாஸ் பேங்க், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 78.38 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 46.07 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து இருந்­தது. இதே காலத்­தில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 21.60 சத­வீ­தம் உயர்ந்து, 723.05 கோடி ரூபா­யில் இருந்து, 879.26 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. வட்டி வரு­வாய், 11.52 சத­வீ­தம் அதி­க­ரித்து, 653.72 கோடி ரூபா­யில் இருந்து, 729.04 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
கடந்த, 2016 டிச., வரை, வங்கி திரட்­டிய மொத்த டிபா­சிட் தொகை, 15.93 சத­வீ­தம் உயர்ந்து, 23 ஆயி­ரத்து, 937 கோடி ரூபா­யில் இருந்து, 27 ஆயி­ரத்து, 750 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.வங்­கி­யின் வாரா கடன், 1.82 சத­வீ­த­மாக நடப்பு நிதி­யாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில் உள்­ளது. இதுவே கடந்த நிதி­யாண்­டில் வங்­கி­யின் வாரா கடன் 0.82 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது.

மூலக்கதை