பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ராம்தேவ்

தினமலர்  தினமலர்
பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ராம்தேவ்

புனே : யோகா குரு பாபா ராம்­தேவ் கூறி­ய­தா­வது: பதஞ்­ச­லி­யின், உடல் நல­னுக்கு ஊறு விளை­விக்­காத, நுகர்­பொ­ருட்­களின் விற்­பனை அமோ­க­மாக உள்­ளது. அத­னால், பதஞ்­சலி நிறு­வ­னம், மிகப் பிரம்­மாண்ட வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. இது, இத்­து­றை­யில் உள்ள பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் துாக்கத்தை கெடுத்­துள்­ளது. எந்த பன்­னாட்டு நிறு­வ­ன­மும், இந்­தி­யா­வின் மீது உள்ள அன்­பால், இங்கு தொழில் துவங்க வரு­வ­தில்லை. அந்­நி­று­வ­னங்­கள், ௧ ரூபாய் முத­லீடு செய்து, 100 ரூபாயை தங்­கள் நாட்­டிற்கு கொண்டு போகின்றன.
தற்­போது, பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு கடும் போட்­டி­யாக பதஞ்­சலி உரு­வெ­டுத்­துள்­ளது. அத­னால், பன்­னாட்டு நிறு­வ­னங்­கள், உறக்­க­மின்றி தவிக்­கின்றன. அறி­வி­யல், தொழில்­நுட்­பம், மூல­த­னம், இயற்கை வளம் உள்­ளிட்ட அனைத்­தி­லும், சுய­சார்­புள்ள நாடாக, இந்­தியா விளங்­கு­கிறது. வங்­க­தே­சம், நேபா­ளம், பாகிஸ்­தான் ஆகிய நாடு­க­ளி­லும், பதஞ்­சலி கள­மி­றங்­கும். அந்­தந்த நாடு­களில் சம்­பா­திப்­பதை, அங்­குள்ள மக்­களின் வளர்ச்­சிக்கு செல­விட்­டால், எந்த நாடும் என்னை எதி­ரி­யாக பாவிக்­காது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை