கட்டிடத்தில் பெரும் வெடிப்பு! - இருவர் படுகாயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டிடத்தில் பெரும் வெடிப்பு!  இருவர் படுகாயம்!!

இன்று Boulogne-Billancourt இல் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பான முதல்கட்ட விசாரணைகளில், Hauts-de-Sein இன் Boulogne-Billancourt பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றே வெடித்துள்ளது. தரை தளத்தில் இருந்து முதல் இரண்டு தளங்கள் உடைந்து நொருங்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நண்பகலுக்கு முன்னதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் அங்கு அதிகளவான தீயணைப்பு துறை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இரு நபர்கள் படுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டிட வெடிப்புக்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலக்கதை