காவற்துறையினர்க்குத் தீயிட்டவர்கள் நீதிமன்றத்தில்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவற்துறையினர்க்குத் தீயிட்டவர்கள் நீதிமன்றத்தில்!!

எசொன் மாவட்டத்தில் உள்ள வித்ரி-சத்தியோனில் (Viry-Châtillon - Essonne), கடந்த ஒக்டோபர் மாதம், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான ஒரு நடவடிக்கைக்காகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையினரை, அவர்களின் வாகனத்துடன் வைத்துப் பெற்றோல் குண்டு வீசிக் கொழுத்தியதோடு, உதவிக்கு வந்த மற்றொரு காவற்துறையினரின் வானம் மீதும்  பல இளைஞர்கள் கொண்ட குழு, தாக்குதல் நடாத்தி, தீக்கிரையாக்கியிருந்தமை வாசகர்கள் அறிந்த செய்தி. இதில் இரண்டு காவற்துறையினர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தக் குற்றச் செயலின் அடிப்படையில், சில நாட்களிற்கு முன்னர், 12 பேரினைக் காவற்துறையினர் கைது செய்திருந்தனர். அவர்களில் ஐந்து பேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று கருதப்படும் மிகுதி ஏழு பேரும், இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றவாளிகள் அனைவரும் 17 முதல் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர்களில் பலர் கிரிணியில் (Grigny) வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர். குற்றச்சம்பவம் நடந்த, வித்ரி-சத்தியோனின் அயல் நகரமே கிரிணி என்பதும் குறிப்பித்தக்கது. மற்றையவர்கள் Étampes  மற்றும் Seine-et-Marne இல் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எவ்ரியின் (நுஎசல) அரசப் பரதிநிதி வழக்கறிஞர் Eric Lallement  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை