பரிஸ் - சாரதி இல்லா பேரூந்து வெள்ளோட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  சாரதி இல்லா பேரூந்து வெள்ளோட்டம்!!

விரைவில் சேவைக்கு வரும் சாரதி இல்லா பேரூந்து வரும் திங்கட்கிழமை பரிசில் வெள்ளோட்டம் விடப்பட உள்ளது.
 
வரும் திங்கட்கிழமை முதன் முறையாக பரிசில் சாரதி இல்லா தானியங்கி பேருந்து வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. Gare de Lyon க்கும் Austerlitz இடையே இந்த சோதனையோட்டம் விடப்பட உள்ளது. சாள்-து- கோல் மேம்பாலத்தில் இது இயக்கப்பட உள்ளது. Austerlitz நகரில் இருந்து Lyon நகர் வரை இந்த சேவை இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நேர் பாதையில் மொத்தம் 207 மீட்டர் பயணிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 20 கிலோமீட்டர் தூரம் சேவையில் ஈடுபடப்பட உள்ளது. 
 
RATP தெரிவிக்கையில், ஒவ்வொரு பேருந்தும் 12 பயணிகளை கொண்டுள்ளது . கடந்த 3 மாதங்களாக சேதனையிடப்பட்டு வரும் திங்கட்கிழமை இந்த சேவை வெள்ளோட்டத்துக்கு விடப்படுகிறது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த சேவையை ஆரம்பித்து வைக்கிறார்.
 
 

மூலக்கதை