தொண்டு நிறு­வ­னத்­துக்கு ரூ.5 லட்சம் அப­ராதம்

தினமலர்  தினமலர்
தொண்டு நிறு­வ­னத்­துக்கு ரூ.5 லட்சம் அப­ராதம்

புது­டில்லி;ம.பி.,யில், தனியார் மருத்­துவ கல்­லுா­ரிக்கு எதி­ராக, தொண்டு நிறு­வனம் தாக்கல் செய்த மேல்­மு­றை­யீட்டு மனுவை தள்­ளு­படி செய்த சுப்ரீம் கோர்ட், அற்ப கார­ணங்­க­ளுக்­காக கோர்ட் நேரத்தை வீண­டித்­த­தற்­காக, ஐந்து லட்சம் ரூபாய் அப­ராதம் விதித்­தது.
மத்­திய பிர­தேச மாநி­லத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் முதல்­வ­ராக உள்ளார். இங்கு, போபால் அருகே, தனியார் அமைப்­புக்­காக மருத்­துவ கல்­லுாரி கட்ட, அரசு நிலம், ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. இதை எதிர்த்து, அங்­குள்ள தொண்டு நிறு­வனம், அம்­மா­நில ஐகோர்ட்டில், பொது­நல வழக்கு தொடர்ந்­தது.
இதை விசா­ரித்த, ம.பி., ஐகோர்ட், கடந்த, 2012ல், ‘பொது­மக்­களின் மருத்­துவ தேவையை கருத்தில் வைத்தே, மருத்­துவ கல்­லுா­ரிக்கு, அரசு இடம் வழங்­கி­யுள்­ளது’ என கூறி, மனுவை தள்­ளு­படி செய்­தது.இந்­நி­லையில், நான்கு ஆண்­டு­க­ளுக்கு பின், சுப்ரீம் கோர்ட்டில், விடு­முறை கால அமர்வில், தொண்டு நிறு­வனம் மேல்­மு­றை­யீடு செய்­தது.
இந்த வழக்கை விசா­ரித்த, தலைமை நீதி­பதி, ஜே.எஸ். கேஹர் தலை­மை­யி­லான அமர்வு, உத்­த­ர­விட்­ட­தா­வது:பொது மக்­களின் நல­னுக்­கா­கவே, அங்கு மருத்­துவ கல்­லுாரி துவக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், தாம­த­மாக இந்த வழக்கை, அவ­சர வழக்­க­மாக விசா­ரிக்­கும்­படி மனு­தாரர் கோரி­யுள்ளார்; வெறும் அற்ப கார­ணத்­திற்­காக, மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது; இதை ஏற்க முடி­யாது. மனுவை தள்­ளு­படி செய்­கிறோம்; மனு­தாரர், ஐந்து லட்சம் ரூபாய் அப­ராதம் செலுத்த வேண்டும்.இவ்­வாறு நீதி­ப­திகள் கூறினர்.

மூலக்கதை